Header Ads



உயிரை பொருட்படுத்தாமல் தண்டவாளத்தின் டோர்ச் லைட்டுடன் நின்ற இளைஞர் - பாரிய விபத்தை தடுத்து நிறுத்தினார்


ஹப்புத்தளைக்கும் இதல்கஸ்ஹின்னவிற்கும் இடையில் நேற்று -08- இரவு பயணித்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.


குறித்த ரயில் வீதியில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்து ரயில் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், உடனடியாக செயற்பட்ட ஒருவர் வழங்கிய எச்சரிக்கை காரணமாக பாரிய விபத்தை தவிர்க்க முடிந்ததாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விசேட ரயிலின் சாரதி உதவியாளர் எம்.பி.நிரோஷன் தெரிவித்துள்ளார்.


ரயில் தண்டவாளத்தின் மீது டோர்ச் லைட்டுடன் நின்ற ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ரயிலை நிறுத்துமாறு சைகை காட்டியதால் ரயிலை நிறுத்த முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரயில் விபத்தை தடுக்க உதவிய காவலாளியான எச்.எம். விஜேரத்னனவின் துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.