அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இலங்கை, நாட்டின் தலைவரிடம் பேசுவதில் அர்த்தமில்லை
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இலங்கை உள்ளதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியலையும் அமெரிக்கா முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரும், நாட்டின் தலைவர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஒன்பது வருடங்களாக இந்த வேலையை நான் செய்தேன். நான் எப்போதாவது ஒரு நாள் புகார் செய்திருக்கிறேனா அல்லது அழுதிருக்கிறேனா?
போரையும் மீறி நாங்கள் எங்கள் பணியை செய்தோம். அதுதான் மத்திய வங்கி ஆளுநருக்கும் நாட்டின் தலைவர்களுக்கும் தேவை.
இனி எங்களிடமோ அல்லது இந்த நாட்டின் தலைவரிடமோ பேசுவதில் அர்த்தமில்லை. எல்லாமே அமெரிக்கா” எனத் தெரிவித்துள்ளார்.
ஆம் கப்ரால் கூறுவதுபோல், இலங்கை அமெரிக்காவின் கையில் இருக்கின்றது. உங்கள் கையில் வைத்துக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துமாறு பொதுமக்கள் உம்மிடம் நாட்டின் நிதியை உம்மிடம் ஒப்படைத்தனர். நீர் என்ன செய்தீர். மத்திய வங்கியில் செய்ய வேண்டிய களவுகள் அத்தனையையும் செய்து களவாடப்பட்ட பொதுமக்களின் கோடான கோடி டொலர்களை வௌிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்து இங்குள்ள அத்தனை முக்கியமான ஆவணங்களையும் சுட்டெறித்து அழித்து விட்டு இவை அனைத்தையும் பொதுமக்கள் மறந்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் இன்னும் தத்துவம் கக்கும் உமது போலி வேடத்தை கொஞ்சம் நிறுத்தினால் போதும், மிகவிரைவில் உமக்குரிய கூலியை இந்த நாட்டு மக்கள் சரியாக வழங்குவதற்கு என்றும் எப்போதும் தயங்கமாட்டார்கள். காலம் தாமதிக்கும். ஆனால் செய்த அநியாயம், களவு கொள்ளைகளுக்கு உரிய தண்டனை எந்தக் குறைபாடுகளுமின்றி உமக்குக் கிடைக்கும்.
ReplyDelete