யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
யாழ். வணிகர் கழகத்தில் இன்று மாலை உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொருட்களின் விலைகள் அதிக அளவில் காணப்பட்டது.
தற்பொழுது நாட்டில் ஓரளவுக்கு பொருளாதாரம், சீரடைந்து வருவதாக நாங்கள் அறிகின்றோம்.
எரிபொருட்கள் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உணவு பண்டங்களிலும் சீனி, மாவு, ஏனைய சில பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் எரிபொருளின் விலையும் குறைவடைந்துள்ளது.
போக்குவரத்து செலவுகள் குறைவடைகின்றது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.
இந்த கூட்டத்தில் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பு , அந்த அடிப்படையில் குறைந்த அளவு குறைப்பதற்கு நாங்கள் இந்த கலந்துரையாடலில் எட்டி இருந்தோம்.
தற்பொழுது யாழ்ப்பாணம் குடாநாட்டில் விற்பனை செய்கின்ற பிளேன் டி மற்றும் மாதேனீர் , தற்பொழுது விற்பனை செய்யும் விலையில் இருந்து பத்து ரூபாய் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோல் கோதுமை மாவில் செய்யப்படுகின்ற ரொட்டி தற்போது விற்பனை செய்யும் விலையில் இருந்து பத்து ரூபாய் குறைத்து விற்பனை செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தூரன் பிரதீபன், நிதர்சன் வினோத்,
Post a Comment