Header Ads



அவுஸ்திரேலியாவில் தனுஷ்கவுக்கு, வழங்கப்பட்ட அனுமதி


பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


31 வயதான தனுஷ்க குணதிலக்க, இன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனை மாற்றத்துக்காக விண்ணப்பித்தார்.


அவர் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 


தனுஷ்க குணதிலக்க, கடந்த 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.


பின்னர் பெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டன. அதனூடாக அவருக்கு வட்ஸ் அப் பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியே செல்லவும் நீதிமன்றம் அனுமதித்தது.


இந்த நிலையில், தற்போது பிணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் குணதிலக்க தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.