கடத்தல்காரர்களிடம் சென்ற, விஹாராதிபதி பிடிபட்டார்
பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்ட விஹாரை ஒன்றின் விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் விஹாராதிபதி பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதய குமாரவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பிரகாரம் மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் பாரிய தந்தம் ஒன்றைவிற்பனை செய்வதற்காக கொள்வனவு செய்பவரை தேடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பல முக்கிய தகவல்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே விஹாராதிபதி கைதானார்.
வீரகேசரி
Post a Comment