மரண தண்டனைக்காக காத்திருக்கும் தங்கராஜூ சுப்பையா
2017ஆம் ஆண்டு ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை புரிந்த குற்றத்திற்காக தங்கராஜு சுப்பையாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சுப்பையாவின் மரண தண்டனை ஏப்ரல் 26 ஆம் திகதி சாங்கி சிறையில் நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் சிறைத்துறை உறுதி செய்துள்ளதாக புதன்கிழமை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவர் நேரடியாக ஈடுபடாததால் அவரது குடும்பத்தினர் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலுக்காக 11 பேர் தூக்கிலிடப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் முறையாக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் அரசாங்கம் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு ஏராளமான போராட்டக்காரர்கள் மரண தண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் சிங்கப்பூர் தமிழரான தங்கராஜூ சுப்பையாவின் (46) மரண தண்டனை இந்த ஆண்டு நிறைவேற்றப்படவுள்ள முதல் மரண தண்டனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment