Header Ads



இலங்கையில் நில அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


எனினும், கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ​​இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.


2020இல் 16 நிலநடுக்கங்களும் 2021இல் 18 நிலநடுக்கங்களும் 2022இல் 5 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.


இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.


மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கமளிப்பதற்காக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம், வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஏனைய நிறுவனங்கள் இணைந்து நேற்று (26) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.