Header Ads



அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் வசந்த கரன்னாகொட


வடமேல் மாகாண ஆளுநரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.


கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன் இருப்பதாகவும், ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.