சூடானில் இராணுவத்திற்குள் மோதல், பரபரப்பான சூழல் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்
சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துணை இராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
Post a Comment