Header Ads



எமது சமுக தாயை, காப்போம் வா தோழா..!


தன்னுடைய இளம் சந்ததியினரை நாகரிக அறியாமையில் (Civilized Ignorance) இருப்பதைச் சமுதாயம் விரும்புவதில்லை. சமூகம், பண்பாடு, சமயம்,கல்வி  மற்றும் பிறதுறைகளில் அடைந்த அடைவுகளை அடுத்த தலைமுறைக்கு (Future Ready Society) மாற்றவேண்டிய கடமை சமுதாயத்திற்கு உள்ளது. சமுதாயம் சிக்கலுறும் போதும் அறிவு தடைப்படும் போதும், சமூக குழுக்கள் முறையான கல்வியின் தேவைகளை உணர்கிறது.


மொழியைக் கற்றுத் தரவும், விரும்பத்தகாதது, நல்லவை, கெட்டவை போன்றவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதற்கும், ஆளுமையின் அடிப்படைகளைப் பெறவும் பள்ளியும் ஒத்த குழுவும் வெவ்வேறு பண்பாட்டு சூழலில் இருப்பினும், அவை தனித்தன்மை வாய்ந்த ஆளுமை வளர்ச்சிக்கு, அடுத்தபடியாகப் பேருதவி செய்கின்றன. ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றிச் சென்று, இடைவினைபுரியும் (Interaction) போது வெற்றி அல்லது தோல்வியை அடையலாம். தோல்வி அடையும் போது, குறையை அறிந்து திருத்திக் கொள்ளவும், புதிய விதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், ஆளுமை வளர்ச்சியை அடையவும், குடும்பம், பள்ளி ஆகியவை உதவிட முடியும்.


இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை (Movable and Immovable Asserts) அர்ப்பணிப்பதே வக்பு ஆகும், மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.


“வக்ப்” என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.


ஒரு தடவை உமர் ரழியல்லாஹ அவர்கள் நபி (ஸல்) அலை அவர்களிடம் யாரஸ~ லல்லாஹ் இதுவரை எனக்குக் கிடைத்திராத மிகவும் பெறுமதியான சொத்தை கைபரில் பெற்றுக் கொண்டேன். அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அது விற்கப்பட நன்கொடையாக வழங்கப்பட அனந்தரமாக்கப்பட முடியாத ஸதகாவாக வக்ப் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். உமர் ரழியல்லாஹ அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமைகளுக்கும், போராளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் வக்ப் செய்தார்கள். (நூல் : சஹீஹ் அல் புகாரி )


அவ்வரிசையில் கபூரியா அரபிக் கல்லூரியும் அடங்கும் NDH அப்துல் கபூர் அவர்களால் நன் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பொதுச் சொத்து (Waqf or Charitable Trust), இது கடந்த 92 வருடமாக இயங்கி வருகின்ற நிலைமையில் திடீரென ஒரு புத்திலிருந்து பாம்பொன்று இப் பொது சொத்தை தனியார் சொத்தென வாதாடிக் கொண்டிருக்கிறது

கபூரிய்யா அரபுக்கல்லூரியின் சொத்தை, அதனை முஸ்லிம் சமூகத்துக்காக நன்கொடையாக வழங்கிய குடும்பத்தின் ஒருவர் அந்த சொத்தை மீண்டும் தனது அதிகாரத்துக்கி கீழ் பெற்றுக்கொண்டு, வக்பு சட்டத்துக்கு அப்பால் சென்று செயற்படுகின்றார்.


வேலியே பயிரை மேய்கின்ற கதையாக மாரி இருக்கின்ற இந்த செயல் நாளை எமது பாரம்பரியம்,வரலாறு,கல்வி போன்ற சமூக பொருளாதார சொத்த்துக்கள் சூறையாடப்படும், இக் கலாசாலையானது பல ஆயிரக்கணக்கான புத்தி ஜீவிகள்,உலமாக்கள், சட்ட வல்லுநர்கள், ஆய்வாளர்கள், இராஜதந்திரிகளை செதுக்கிய தாய் ,இந்த வலுவான சக்தி வாய்ந்த ஆல மரத்தை  ,ஒரு சமூக தாயை சாய்த்து விறகாக்கும் பணி; இவர்களை  விட கை கட்டி ,கொட்டி பார்த்துக் கொண்டிருக்கும் உம்மத்தின் மீது பாரிய கடப்பாடும்  கேள்விகளும்  உண்டு ! 


இக் கல்விக்கூடமானது வெறும் ஒரு தனி மனித அல்லது குடும்ப மேம்பட்டோடு நின்று விடாது மாறாக இது பொது,சமூக , இந்த நாட்டின் கல்வி ,பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பு இருக்கின்றது .


கல்வி சமூக முன்னேற்றத்திற்கான ஒரு கருவி எனலாம் - கல்வி சமூக அமைப்பிலுள்ள கடினத் தன்மையை, பிறப்பின் காரணமாக எழும் பாகுபாடுகளை நீக்குகிறது. கல்வி உயர் கொள்கைகளை, தகுதிநிலையை, நல்ல பழக்க வழக்கங்களை, தன் நம்பிக்கையை, மதிப்புக்களை அடையச் செய்கிறது.


மாணவர்களுடைய நிலைப்பெயர்வு அவர்கள் பெறும் கல்வியைப் பொறுத்து அமைகிறது. மாணவர்கள் பெறும் மொழி அறிவு, பாடப்பொருளறிவு மேற்கொள்ளும் கல்வி ஆய்வுகள் போன்றவற்றைப் பொறுத்து அவர்களது நிலைப் பெயர்வு அமைகிறது,ஒரு நாட்டினுடைய பின் தங்கிய நிலையை நீக்கி, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல கல்வி உதவுகின்றது. வளர்ந்த நாடுகளில் கல்வி உயர்தொழில் நுட்பம் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேலோங்கி வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கல்வியின் வாயிலாக சமூக நிலைப் பெயர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


இப் பொதுவுடைமை சொத்தை பாதுகாக்க அனைத்து சமூக அமைப்பு கட்சிகள் கைகோர்க்க வேண்டும் ,தவிர அது எமது கொள்கை ,கட்சி சார்ந்தது அல்ல , என (Silent Majority) அமைதியான பெரும்பான்மை என்பது ஒரு நாடு அல்லது குழுவில் உள்ள குறிப்பிடப்படாத பெரிய குழுவாகும், அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தாத கல்விசார் பெரும்பான்மையினர் . 


கைகோர்த்து எமது சமுக தாயை காப்போம் வா தோழா !   


Zuhair Ali (MBA,PGD,HND,GHAFOORI)

No comments

Powered by Blogger.