யா அல்லாஹ் எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக
யா அல்லாஹ்...!
உன்னுடைய அருட்கொடைகளில் பரிபூரணத்தைக் கேட்கிறோம்
அனைத்து நலன்களை உள்ளடக்கிய கருணையைக் கேட்கிறோம்
நீடித்திருக்கும் ஆரோக்கியத்தைக் கேட்கிறோம்
மகிழ்ச்சிகரமான வாழ்வைக் கேட்கிறோம்
குதுகலமான நீண்ட ஆயுளைக் கேட்கிறோம்
நல்லமல்கள் புரியும் தவ்பீக்கைக் கேட்கிறோம்
இம்மை, மறுமைக்கு பலன் தரும் கல்வியைக் கேட்கிறோம்
விசாலமான வாழ்வாதாரங்களைக் கேட்கிறோம்
என்றும் உனக்கும், உன்னுடைய ரசூலுக்கும் கட்டுப்பட்டவனாக வாழ்ந்து, உன்னுடைய திருப்தியைப் பெற்றவனாக அழகிய கலிமாவை மொழிந்தவனாக உன்பால் என்னை அழைக்குமாறு கேட்கிறோம்
இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக
ஆமீன்
Post a Comment