Header Ads



அநுரகுமாரவின் மகனுக்கு வேலை பெற்றுக்கொடுத்தாரா நாமல்..?

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் மகனுக்காக மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பரிந்துரை செய்தமை குறித்த விடயம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.


சமூக வலைத்தளம் மூலமாக இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 



நான் நிறைய பேருக்கு உதவியுள்ளேன். அதில் ஒருவராக அநுரகுமாரவின் மகன் இருந்திருக்க கூடும்.


இல்லாமலும் இருந்திருக்கலாம். எனினும் அது தொடர்பில் நாம் அதிகளவில் அவதானம் செலுத்த தேவையில்லை என நான் நினைக்கிறேன்.


அரசியல் செய்பவர்களாக இருக்கலாம், இல்லாதவர்களாக இருக்கலாம் எனினும் அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த காரணங்களுக்கும் சம்பந்தமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.