ஓடும் ரயிலில் செல்பிக்கு ஆசைப்பட்ட, சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட ரயிலில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று தண்டவாளத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
Post a Comment