இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்யும் இலங்கை
X-Press Pearl கப்பல் விபத்திற்குள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை(24) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சஞ்ஜய இராஜரட்ணம், நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.
அமைச்சரவை அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த இழப்பீட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment