Header Ads



புதிய வகை அரிசியில் தயாரிக்கப்படும் பிஸ்கட், இனிமேல் சுவை அதிகரிக்குமா..?


பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய பி.ஜி. 381 என்ற புதிய அரிசி வகையை பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


பத்தலகொட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜே.பி.சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“பத்தலகொட அரிசி ஆராய்ச்சி நிறுவனம் இந்த அரிசி வகையை கண்டுபிடித்திருப்பது ஒரு சாதனை.


இந்த நெல் ரகம் ஓரளவு மகசூல் தரக்கூடியது, ஏக்கருக்கு நான்கு மெட்ரிக் தொன் மகசூல் தருகிறது. வறண்ட பபிரதேசத்திற்கு இந்த நெல் வகை பொருத்தமானது.


இதுவரை பிஸ்கட் உற்பத்திக்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.


தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி வகையை பிஸ்கட் தொழில் துறையில் அதிக வெற்றிகரமான முறையில் பயன்படுத்த முடியும்.”என தெரிவித்துள்ளார்.   


No comments

Powered by Blogger.