அமெரிக்கத் தூதுவரை கலாய்க்கும் வீரவங்ச, பொன்சேக்காவுக்கும் பதிலடி
"தூதுவர் ஜூலி எனது புத்தகத்தைப் பற்றி ட்வீட் செய்திருந்தார், எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரே நாளில் படிக்க அவர் ஆர்வமாக இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் கூறினார்.
இதேவேளை, வீரவன்சவின் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
"இராணுவத் தளபதிகள் மீது சேறு பூச வேண்டாம். அவர் பக்கம் மாறி அமைச்சுப் பதவியைப் பெற முயற்சிக்கிறார்" என்று பொன்சேகா கூறினார்.
அதற்கு பதிலளித்த வீரவன்ச, தனது பிரசுரத்தின் மூலம் சதித்திட்டத்தின் உண்மை வெளிவருவதால் பொன்சேகா வேதனைப்படுவதாக குற்றம் சாட்டினார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அமெரிக்கத் தூதுவர் மற்றும் சரத் பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் இருந்தார் என வீரவன்ச இதன்போது தெரிவித்தார்.
Post a Comment