Header Ads



அப்பலோ வைத்தியசாலை மூலம், இலவச வைத்திய ஆசோசனை (முழு விபரம் உள்ளே)

மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக துரித தொலைபேசி அழைப்பு சேவையை இந்தியாவின் அப்பலோ வைத்தியசாலையின் கிளை அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதன் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நாட்டில் வசிக்கும் எந்தவொரு பிரஜைக்கும் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக 'இலவச மருத்துவத்திற்கான உதவி எண்' என்ற அவசர தொலைபேசி சேவை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.


சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் கொள்ளுப்பிட்டியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


இந்தியாவின் அப்பலோ வைத்தியசாலை மற்றும் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அதன் கிளை அலுவலகத்தின் ஊடாக இந்த சேவை வழங்கப்படவுள்ளது.


இந்த அழைப்பு சேவையின் மூலம், நாட்டு மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், இலங்கையில் சிகிச்சை வசதிகள் இல்லாத நோய் நிலைமைகள் ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கும் முறையும் உள்ளது.


இல.466, காலி வீதி, கொழும்பு 3 முகவரியில் இந்த கிளை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, 0773679122, 0777528588, 077719558 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


(வீரகேசரி)

No comments

Powered by Blogger.