Header Ads



அக்குரணையில் தாக்குதல் நடக்கலாமென, தகவல் வழங்கியவன் கைது - பொலிஸார் அறிவிப்பு


அக்குரன பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 118 என்ற அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேகநபர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கடந்த 18 ஆம் திகதி இரவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 என்ற அவசர இலக்கத்திற்கு அக்குறன நகரில் ஏதாவது நாசவேலைகள் இடம்பெறும் என தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 


அதன்படி, பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், பல விசேட பொலிஸ் குழுக்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். 


இருப்பினும் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட தகவல் தவறானது என பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.