நோன்பு திறக்கும் நேரங்களில் கேட்கும் துஆ
அல்ஹம்துலில்லாஹில்லதீ ஹதானா லிஹாதா வமா குன்னா நஹ்ததீ லவ்லா அன் ஹதானல்லாஹ்
நாங்கள் இந்த நல்லமல்கள் செய்ய நேர்வழி காட்டிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
அவன் நேர்வழி காட்டியிராவிட்டால் நாங்கள் நேர்வழியை அடைந்திருக்க முடியாது.
ஏகனே! யாரிடமும் எத்தேவையுமற்றவனே!
உனக்காக,உன் மீதுள்ள விசுவாசத்தால்,உன் நன்மைகளை எதிர் பார்த்தவர்களாக நோன்பு நோற்றுவருகிறோம், நின்று வணங்குகிறோம்
எங்கள் அமல்களில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் ஏற்றுக் கொண்டு எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்!
பரக்கத்தான இம் மாதத்தில் நீ மன்னிப்பளித்தவர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!பரக்கத்தான இம்மாதத்தில் உன் திருப்தியை பெற்றவர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்! இப்புனித மாதத்தில் உன் மன்னிப்பைப் பெற்று நரகம் ஹராமாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!
மறுமையில் வலது கையில் குறிப்பேடு அளிக்கப்பட்டு,கேள்விகணக்கும் லேசாக்கப்பட்ட வர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!மறுமையில் உன் முன்னால் நான் நிற்பதை சிறப்பாக்குவாயாக!!
உன் அழகு முகத்தை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கும் அளிப்பாயாக!
கண்மணி நாயகம் ﷺ அவர்களுடன் சொர்கத்தில் அருகே இருக்கும் பாக்கியத்தை நல்கு வாயாக!
வரும் ரமளான் மாதத்திலும் நோன்பு நோற்கும் வாய்ப்பை நல்குவாயாக!
எங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், உடல், மன ராஹத்தையும், நல்லமல்களுடன் நீண்ட ஆயுளையும் தந்தருள்வாயாக!
எங்கள் பெற்றோர் பாவங்களை மன்னிப்பாயாக!
ரமளான் மாதத்தில் நாங்கள் கேட்ட அனைத்து துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்.
இப்தார்துஆ
Muhammed Ismail Najee Manbayee
Post a Comment