வௌவால் கடித்த முதியவருக்கு ஏற்பட்ட நிலை
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தை சேர்ந்த 84 வயது முதியவர், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 27ம் திகதி வௌவால் ஒன்று கையை கவ்வுவது கண்டு அதிர்ச்சியுடன் எழுந்துள்ளார்.
வௌவாலை தூக்கி எறிந்து விட்டு, கையை உடனடியாக சோப்பு போட்டு கழுவிய முதியவர், அவரது மனைவியின் படுக்கைக்கு அருகில் சென்று உறங்கியுள்ளார்.
மேலும் விரைவாக மருத்துவமனை சென்ற தம்பதிகள் இருவருக்கும் மிருகங்கள் கடித்த பிந்தைய வெளிப்பாடு தடுப்பு (PEP) ரேபிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் ஜனவரி 2021 ல், முதியவர் முகத்தின் வலது பக்கத்தில் கடுமையான வலி மற்றும் கண்ணில் அதிகப்படியான எரிச்சல் போன்றவற்றுடன் மருத்துவமனைக்கு மூன்று முறை சென்றுள்ளார்.
84 வயது முதியவர் மருத்துவமனைக்கு இறுதியாக வந்த போது, இரவில் வியர்வை, முக முடக்கம் மற்றும் இடது காதில் வலி மற்றும் சிவந்த வலது கண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இறுதியில் மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், மூளை மற்றும் முதுகுத் தண்டில் கடுமையான வீக்கம் ஏற்பட்ட 15 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
பின் அவரது உடலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் , வெறி நாய்க்கு நிகரான ரேபிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக சுகாதார அதிகாரி தெரிவித்த தகவலில், ரேபிஸ் நோயாளிக்கு சரியான மற்றும் பொருத்தமான நோய்த் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும், அமெரிக்காவில் உயிரிழந்த முதல் நபர் இவர் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் உயிரிழந்த முதியவர், கரோனரி இதய நோய், வகை 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் போன்ற பல அடிப்படை நிலைமைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment