இலங்கைக்காக பெருந்தொகை பவுண் நிதி, திரட்டிய இங்கிலாந்து மாணவர்கள்
இந்தநிதியை, இரண்டு தொண்டு நிறுவனங்கள் ஊடாக இலங்கை மக்களுக்கான சுத்தமான கிணறுகள் என்ற திட்டத்துக்கு வழங்கவுள்ளதாக சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.
50 கிலோ மீற்றர் மலையேற்றம் உட்பட்ட நடைப்பயணத்தின் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
கல்லூரியின் தலைவர் மார்க் பென்னி தலைமையிலான குழு கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டு ஒரேநாளில் பெருந்தொகை நிதியை சேகரித்துள்ளது.
இதன் மூலம் தூய்மையான கிணறுகளை உருவாக்கவும், விதை பொதிகளை வழங்கவும் மற்றும் நிலையான உற்பத்திக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த செயற்திட்டங்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் சொலிஹூல் கல்லூரி அறிவித்துள்ளது.
முன்னரும் பல ஆண்டுகளாக, இலங்கையின் ஏழ்மையான பகுதிகளில் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு சொலிஹூல் கல்லூரி தமது நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment