Header Ads



பல கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது


சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர்கள் நேற்று(2) விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வரியில்லா வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரும் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த நகைகள் ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பொதிகளில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த தங்க கையிருப்பை, பயணிகள் பரிமாற்று பகுதியில் உள்ள குறித்த வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம் கொடுத்துள்ளார்.


பின்னர் அந்த முகாமையாளர் அதனை நாட்டுக்குள் கடத்திச் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மற்றைய இரு சந்தேக நபர்களும் இந்திய பிரஜைகள் என்பதுடன் அவர்கள் கொண்டு வந்த 7 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.


தங்கம் துபாய் அல்லது சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் இந்த தங்கம் கையிருப்பு ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.