Header Ads



ஜப்பான், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, சவுதி, ஐரோப்பிய நாடுகளில் பாரிய அளவில் வேலை வாய்ப்பு

வெளிநாடுகள் பலவற்றில் இலங்கை தொழிலாளர்களுக்கு பாரிய அளவில் வேலை வாய்ப்புக்கள் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


ஜப்பானில் தாதியர்களின் வேலை வாய்ப்புகள், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகள், ஐரோப்பிய நாடுகளில் தாதியர் வேலை வாய்ப்புகள், சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் இலங்கை தொழிலாளர்களுக்கு பாரிய அளவில் வேலை வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று (18) காலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தொழில் பயிற்சி அதிகார சபைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.


இந்த வேலைத் தேவையை பூர்த்தி செய்ய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்க முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.


இந்த வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.