Header Ads



ஹபாயா அணியும் முஸ்லிம், பெண் சட்டத்தரணிகளுக்கு சிக்கல்..? (வர்த்தமானியுடன் விபரம் இணைப்பு)



பெண் சட்டத்தரணிகளுக்கான நீதிமன்ற ஆடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல்  சென்ற முப்பதாம் திகதி வெளிவந்துள்ளது. 

அது பின்வருமாறு,


The attire of women attorneys-at-Law has been amended by Gazette No. No. 2325/44 dated 30.03.2023 to permit the following :-


(a) saree and jacket in white, black, off-white, grey or mauve; or 


(b) Black trouser with white blouse and black coat and shoes; or 


(c) Black skirt with white blouse and black coat and shoes. 


வர்த்தமானியின் அடிப்படையில் சாரி, கறுத்த றவுசர் மற்றும் கறுத்த ஸ்கேர்ட் என்பனவற்றை மாத்திரமே பெண் சட்டத்தரணிகள் அணிய முடியும். அதில் ஹபாய் உள்ளடங்காது.


இதற்கு முன்னர் வந்த வர்த்தமானி பின்வருமாறு குறிப்பிடுகிறது.


The attire of women Attorneys-at-Law shall be as follows :


White, black, grey or mauve saree and jacket, or white, black, grey or mauve frock below the knee length or black coat and black long trousers up to the ankle with high necked white long sleeved shirt with collar tucked inside the trouser and black gown/cloak


இதிலே வருகின்ற Black gown/ cloak என்ற பிரயோகத்தைப் பயன்படுத்தித்தான் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா என்பது நீண்ட gown என்ற அடிப்படையில் அணிந்து வந்தார்கள். புதிய வர்த்தமானியில் அந்த வார்த்தை அகற்றப்பட்டிருப்பதனால்  ஒரு பெண் சட்டத்தரணிக்கு இனி மேல் ஹபாயா அணிந்து கொண்டு செல்லும் அனுமதி உயர் நீதிமன்ற புதிய விதிகளின்படி இல்லை.


இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?


இதனைத் தாண்டி ஒரு பெண் சட்டத்தரணி ஹபாயாவை அணிந்து கொண்டு வழக்கொன்றிற்கு ஆஜராகும் போது எதிர்த்தரப்பு அவரின் ஆடையைக் கேள்விக்குட்படுத்தி ஆட்சேபிக்கலாம்.அதனால் ஒரு சட்டத்தரணியாக ஹபாயாவை அணிந்து கொண்டு நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதோ அல்லது சட்டத்தரணிகளின் இருக்கையில் அமருவதோ முடியாமல் போகும்.


வட கிழக்கிற்கு வெளியே பணிபுரியும் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளுக்கு இது ஒரு மிக்ப்பெரிய சவாலாக அமையப்போகிறது.

- Raazi Mohamed -




No comments

Powered by Blogger.