ஜனாதிபதி வேட்பாளராக சம்பிக்க
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆளத் தகுதியற்றவர் என யாராவது கருதுகிறார்களா எனவும் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘‘ஜனாதிபதியாக யார் சிறந்தவர் என்பதை பொதுமக்கள் இறுதியில் தீர்மானிப்பார்கள். குடும்ப ஆட்சியையோ அல்லது பெற்றோர்கள் செய்தவற்றின் மீது சவாரி செய்வதையோ ஆதரிக்க மாட்டேன்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் வெறுமனே விளையாட்டில் சிறந்து விளங்குபவர் அல்லது ஒரு சிறந்த இராணுவத் தலைவராக இருக்கக்கூடாது.
மாறாக, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்‘‘ என தெரிவித்துள்ளார்.
Post a Comment