இறுதிவரை போராடி தோற்றது இலங்கை
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றார்.
நியூசிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் Ben Lister 2 விக்கெட்டுக்களையும் Adam Milne மற்றும் Ish Sodhi ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி சார்ப்பில் Tim Seifert 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணி சார்ப்பில் பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அதனடிப்படையில் 2 - 1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
Post a Comment