ஒழுக்கக்கேடான அம்சங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
ஒழுக்கக்கேடான அம்சங்கள் அடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தீர்மானித்துள்ளார்.
குறித்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்படும் என்று புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒழுக்கக்கேடான புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பாலியல் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தும் அம்சங்களுடன் புத்தாண்டு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டமை குறித்து குறித்து சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment