பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு
நாடாளுமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை அண்டிய பாதைகளில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் வரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்யும் வீதிகளில் சஞ்சரிக்கும் சந்கேத்திற்கு இடமானவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாதைகளில் பேரணிகள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதுடன், சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment