Header Ads



புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது அலி சப்ரி


பயங்கரவாதிகளை விசாரித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது. எனவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


'பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நீங்கள் இணங்குகிறீர்களா?' என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் என்னால் உடன்பட முடியாத சில விடயங்கள் உள்ளன.


ஒருவரைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்குப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் வழங்குவதை என்னால் ஏற்க முடியாது. அந்த அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருக்க வேண்டும்.


இவ்வாறு சில விடயங்கள் உள்ளன. அமைச்சரவைக் கூட்டத்தில் அதை நான் கூறியிருக்கின்றேன்


இதில் பலருடன் பேசி இந்தச் சட்டமூலம் திருத்தப்பட வேண்டும். சட்டத்தரணிகள் சங்கத்துடனும் பேச வேண்டும்.


இதைத் துஷ்பிரயோகம் செய்ய முடியாது. பயங்கரவாதிகளை விசாரித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த செய்தியை வாசிக்கும் போது இவர் இரட்டை வேடம் போடுகின்றாரா என எண்ணத் தோன்றுகின்றது. இலங்கை மானிட உரிமை மன்னர்களாக தற்போது இரண்டு பேரைத்தான் அரசாங்கம் நியமித்துள்ளது, அவர்களில் இவரும் ஒருவர்.

    ReplyDelete

Powered by Blogger.