தலிபானுடன் தள்ளாடும் அமெரிக்கா, நாங்கள் புலிகளை இல்லாதொழித்ததை குற்றமாக கருதுகிறதா..?
தலிபான் அமைப்பை கூட முடிவுக்கு கொண்டு வர முடியாமல் தள்ளாடும் அமெரிக்கா, உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான புலிகளை இலங்கை இல்லாதொழித்ததை குற்றமாக கருதுவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை இலங்கை இல்லாதொழித்ததை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் குற்றமாக கருதுகின்றன.
தலிபான் அமைப்பை கூட முடிவிற்கு கொண்டு வர முடியாமல் அமெரிக்கா தள்ளாடுகிறது, ஆனால் நாங்கள் உலகில் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை முடிவிற்கு கொண்டு வந்தோம்.
நாட்டுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment