வரலாற்று தவறொன்று நடக்கவுள்ளது - மரிக்கார் எச்சரிக்கை
இனங்களுக்கு இடையே பிரச்சினைகள் புதிய எல்லை நிர்ணயம் ஊடாக மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்னர், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மீளாய்வு குழுவை அமைத்து தவறுகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (04) உள்ளூராட்சி எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய அறிக்கையை பார்க்கும் போது இதன்மூலம் வரலாற்று தவறொன்று நடக்கவுள்ளது. இதனூடாக இனம், மதங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படும் வகையிலேயே காணப்படுகின்றது. அதற்கு முன்னர் மீளாய்வு குழுவை அமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
Post a Comment