Header Ads



அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கப் போகும் ரத்தன தேரர்


"இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கப் போவது நாமே. இனிமேல் ஒருபோதும் ராஜபக்ச குடும்பத்தால் ஆட்சிக்கு வர முடியாது. அந்தளவுக்கு ராஜபக்சாக்களால் நாடு வீழ்ந்துள்ளது"என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், "ராஜபக்ச குடும்பத்தினர் இனி 20 வீதத்துக்கும் குறைவான வாக்கு மட்டத்தில் தான் இருப்பார்கள். அவர்களது அரசியல் ஆதிக்கம் முடிந்துவிட்டது. அவர்களால் அரசியலில் அழுத்தம் மாத்திரம் கொடுக்க முடியும். தலைவர்களாக மாற முடியாது.


இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எடுத்துக்கொண்டால் சவாலை ஏற்றுக்கொள்ளும் திறமை அவரிடம் இல்லை. இவர்களுக்கு வெளியே இருந்து அடுத்த ஆட்சி மலரப் போகின்றது.


நாட்டுப் பற்று தொடர்பில் சரியாக சிந்திக்கக்கூடிய எல்லா தரப்பினரையும் நான் ஒன்றிணைத்து வைத்துள்ளேன். பெரிய திட்டமே என்னிடம் உள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது நாம் அந்த திட்டத்துக்குள் நுழைவோம்.


எந்த அடிப்படையில் என்று எவரும் இப்போது கேட்க வேண்டாம்.அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக நாமே இருப்போம்.


குடும்ப அரசியலை அடிப்படையாக கொண்ட கட்சியின் பக்கம் நாம் செல்லமாட்டோம்.பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு வெளியேதான் எமது அரசியல் இப்போது உள்ளது.


இதற்கமைய ரணில் எமது பேச்சை கேட்பதற்கு தயார் என்றால் அவருடன் வேலை செய்வதற்கு நாம் தயார்."என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பாராளுமன்ற அங்கத்தவர் பதவிக்காக அபசார ஆசாமியுடன் மாதக்கணக்காக பிடித்த சண்டைகளும், கொத்து வெட்டுக்களையும் இந்த நாட்டு மக்கள் இன்னும் அப்படியே ஞாபகம் வைத்திருக்கின்றார்கள். அபசாரைக்கு பல பொய் வாக்குறுதிகளை வழங்கி அவற்றை நிறைவேற்றாமல் பதுங்கியிருந்து அவருடைய வழமையான கப்பம், இலஞ்சம் பணிகளை முன்னெடுத்துக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றும் இந்த இனவாத சங்கி இப்போது இலங்கையின் சனாதிபதியைத் தீர்மானிக்க அவர் தான் பொருத்தமாம். இதற்கு அடிப்படைக்காரணம் விஷயம் தெரிந்தவர்கள் மௌனமாக இருப்பதுதான். அவர்கள் வாயைத் திறந்தால் இந்த இனவாத சங்கியின் வாயடைபடும்.

    ReplyDelete

Powered by Blogger.