Header Ads



இலங்கைக் குரங்குகள் அமெரிக்காவுக்கும் வேண்டுமா..? அமைச்சர் மஹிந்தவின் பதில்


இலங்கையில் இருந்து அமெரிக்காவும் குரங்குகளை கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.


அமைச்சரை ஒருவன் செய்தி சேவை தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைப் பெற சீனா தயாராகி வரும் நிலையில் , அமெரிக்காவும் குரங்குகளைப் பெற விண்ணப்பித்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.


சீனாவை அடுத்து இலங்கை குரங்குகளைக் கோரும் அமெரிக்கா

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைப் பெற சீனா தயாராகி வரும் நிலையில் , அமெரிக்காவும் இலங்கையில் இருந்து குரங்குகளைப் பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது


எனினும்,  அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.