இலங்கை வரலாற்றில் ஆகக்கூடிய, கொரிய தொழில்வாய்ப்புக்கான கோட்டா
இலங்கை வரலாற்றில் ஆகக்கூடிய கொரிய தொழில்வாய்ப்புக்கான கோட்டாவை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கமைவாக 6500 தொழில் வாய்ப்புக்களை கொண்ட கோட்டா கிடைத்துள்ளதுடன் வாரத்தில் சுமார் 200 பேர் கொரிய தொழில்வாய்ப்புக்காக செல்வார்கள்.
கொரியாவில் கடற்றொழில் துறையில் தொழில்வாய்ப்புக்களை பெற்ற 109 பேரைக்கொண்ட குழு நேற்றைய தினம் அங்கு பயணமானது. மேலும் 65 தொழிலாளர்கள் நாளை அங்கு செல்லவுள்ளதுடன் 28 பேரைக்கொண்ட மற்றுமொரு குழு நாளை மறுதினம் கொரியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment