மகனை வீதியில் கைவிட்டு, புதிய கணவனோடு சென்ற தாய்
எம்பிலிபிட்டிய வீதியில் கைவிடப்பட்ட ஐந்து வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று அவரது தாய் மற்றும் தாயின் புதிய கணவர் ஆகியோர் வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் தாயே சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிறுவனை அனுமதிக்கப்பட்ட பின்னர் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படவுள்ளார்.
சிறுவனின் தாய் கணவனை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று தனது தாயும் தாயின் தற்போதைய கணவரும் இணைந்து வீதியில் விட்டுச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment