சைக்கிளில் சென்ற சிறுவர்களை நாய் விரட்டியதில் வேனில் மோதி படுகாயம்
- Ismathul Rahuman -
சைக்கிளில் சென்ற இரு சிறுவர்களை நாய் துறத்தியதில் வாகனத்தில் மோதி படுகாயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பு, பெரியமுல்லையைச் சேர்ந்த 12 வயது சிறுவர்கள் இருவர் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக இரவு 8 மணியலவில் பைச்சிக்களில் சென்றுள்ளனர். சவுண்டஸ் வீதி ஊடாகச் சென்று கொழும்பு புத்தளம் பிரதான வீதிக்கு செல்லும் போது பக்கத்து கடையில் இருந்த நாய் குழைத்துக்கொண்டு இவர்களை துறத்தவே சிறுவர்கள் பயத்தில் பாதையின் மறுபக்கத்திற்கு வேகமாக சென்றுள்ளனர். அச்சமயம் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் வேனில் மோதி படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இரு சிறுவர்களையும் உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கிருந்து அவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
ஒருவரின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் இடுப்பிலும் முறி ஏற்பட்டுள்ளது. மற்றயவரின் கால் முறிவடைந்துள்ளது.
இருவருக்கும் தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேன் சாரதி நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கபட்டார்.
இரவு நேரத்தில் இந்த நாயை திறந்துவிடுவதனால் வழியில் செல்பவர்களை துறத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.
Post a Comment