Header Ads



இலங்கைக்கு கிடைத்த நல்ல பெயர்

 
2023 ஆம் ஆண்டில் உலகில் பயணிக்க சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை (Forbes) பட்டியலிட்டுள்ளது.


எம்மி விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும், தொகுப்பாளருமான Juliana Broste இலங்கையை தேர்ந்தெடுத்ததாக Forbes கூறியுள்ளது. 


“நாட்டில் பணவீக்கம் இருந்தாலும் கூட, பார்வையாளர்கள் இலங்கையை ஒரு கண்கவர் இடமாகவும் மலிவு விலையில் நீண்ட தூரம் செல்லக்கூடிய இடமாகவும் காண்பார்கள். தீவைச் சுற்றிப் பாருங்கள், தலைநகர் கொழும்பின் சலசலப்பு முதல் அழகிய கடற்கரைகள், நெற்களஞ்சியங்கள், நீர்வீழ்ச்சிகள், சமவெளிகள், மலைகள் வரை அந்த நிலம் உங்களை ஏன் வியக்க வைக்கிறது என்பதை அறிவீர்கள்,'' என  Juliana Broste குறிப்பிட்டுள்ளார். 


ஒரு புகைப்பட சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு பயணித்திருந்த Juliana Broste, ''ஒப்பீட்டளவில் குறுகிய தூரத்தில் பார்க்க நிறைய இருக்கிறது, எனவே உங்கள் கெமராவை தயாராக வைத்திருங்கள். இலங்கையில் வனவிலங்குகளைக் கண்டறிவது மிகவும் சிறப்பானது," என்று கூறியுள்ளார். 


அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 


பழங்கால நகரங்களான அனுராதபுரம் மற்றும் கண்டி உட்பட, ஆராய்வதற்கு இலங்கையில் ஏராளமான சுவாரஸ்யமான கலாசார இடங்கள் உள்ளன.


மத ஸ்தலங்களுக்கு செல்லும்போது, உங்கள் தோள்களையும் கால்களையும் மறைக்கும் வெள்ளை நிற ஆடைகளை அணிவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியைப் படம்பிடிப்பது ஒரு சிறப்பம்சமாகும், பாரம்பரிய உடையில் ஆண்களும் பெண்களும் நடனத்தின் மூலம் கதைகளைச் சொல்வதைப் பார்க்கலாம். 


என தெரிவித்துள்ள அவர், “Little England'' எனப்படும் மலைநாடான நுவரெலியாவின் வனப்பையும் தேயிலையின் சுவையையும் விபரித்துள்ளார். 

No comments

Powered by Blogger.