காத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, குறித்த வாரத்திற்குள் உரிய விவாதம் பெறப்படும் என்றும், குறித்த விவாதத்தின் பின்னர் வாக்குப்பதிவு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Post a Comment