Header Ads



சுப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை


மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஒக்லன்டில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் பதிலணித்தலைவர் டொம் லேதம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.


அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சரித் அஸலங்க 67 (41), குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 (45), குசல் மென்டிஸ் 25 (09), வனிடு ஹஸரங்க ஆட்டமிழக்காமல் 21 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேம்ஸ் நீஷம் 4-0-30-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.


பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டரைல் மிற்செல் 66 (44), மார்க் சப்மன் 33 (23), டொம் லேதம் 27 (16), றஷின் றவீந்திரா 26 (13), ஜேம்ஸ் நீஷம் 19 (10), இஷ் சோதி ஆட்டமிழக்காமல் 10 (04) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வனிடு ஹஸரங்க 4-0-30-2, மகேஷ் தீக்‌ஷன 4-0-22-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


இந்நிலையில், மகேஷ் தீக்‌ஷன வீசிய சுப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் இழந்து எட்டு ஓட்டங்களையே நியூசிலாந்து பெற்ற நிலையில், ஒன்பது ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அடம் மில்ன் வீசிய சுப்பர் ஓவரில் சரித் அஸலங்க ஆட்டமிழக்காமல் பெற்ற 10 (02) ஓட்டங்களுடன் வென்றது.


இப்போட்டியின் நாயகனாக சரித் அஸலங்க தெரிவானார்.

No comments

Powered by Blogger.