ஜமாஅத்தே இஸ்லாமி அகில இந்தியத் தலைவராக சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி
- Azeez Luthfullah -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவராக சகோதரர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் நடந்து வரும் மத்தியப் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் ஜமாஅத்தின் அமீரே ஜமாஅத்தாக அவர் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜமாஅத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் இரண்டாவது இளம் அகில இந்தியத் தலைவர் என்கிற சிறப்பை சஆதத்துல்லாஹ் ஹுஸைனி பெறுகின்றார்.
அல்லாஹ் அவருக்கு மன உறுதியையும் எல்லா வகையான அருள்வளங்களையும் தந்தருள்வானாக!
ஆமீன்.
Post a Comment