Header Ads



ரணில் சிறப்பாக செயற்படுகின்றார், அரசாங்கத்துடன் இணையும் திட்டம் என்னிடம் இல்ல


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி இன்று (07.04.2023) தெரிவித்துள்ளார்.


பொதுமக்களால் இந்த சான்றளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


உண்மையைப் பேச வேண்டும் என்ற அடிப்படையில் தமது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, விக்ரமசிங்கவைப் பற்றி மக்கள் கூறுவது இதுவேயாகும் என்றும் பௌசி தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும் அரசாங்கக் கட்சியில் இணைந்துக் கொள்வது தொடர்பான திட்டங்கள் தம்மிடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


ராஜித சேனாரத்ன உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று ஜனாதிபதி ரணிலுக்கு சார்பாக இதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நீங்கள் மூத்த அரசியல்வாதிதானே, நீங்கள் போய் ரணிலுடன் இணைந்து கொள்ளுங்கள், நாட்டையும் மாற்றி சுவிட்ஸர்லாந்து போன்ற சுவன பூமியை உருவாக்கலாம். 95 வயதான உங்களுக்கு ஒருபோதும் மஹாதிர் முஹம்மதின் நிழல் கூட இல்லை. அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதில் முன்னணியில் உங்கள் பெயரும் எப்போதும் உள்ள நீங்கள் வீட்டில் படுத்துக் கிடந்தால் இந்த சமூகத்துக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.