நானும், ரணிலும் உயிருடன் இருக்கமாட்டோம்
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியிலேயே கொள்ளையடித்த ராஜபக்சர்கள் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விடயத்தில் இலஞ்சம் பெற்றிருக்க மாட்டார்கள் என கருத முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அழகாக உரையாற்றுகிறார். 2048ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
2048ஆம் ஆண்டு அவரும் உயிருடன் இருக்க மாட்டார், நானும் உயிருடன் இருக்க மாட்டேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment