"இவர்களில் ஒருவரை ஜனாதிபதியாக மக்கள், போட்டியின்றி தெரிவு செய்ய வேண்டும்"
இலங்கை மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒரு தடவை போட்டியின்றி தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“பெற்றோல் , ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறையுடன் பொது அமைதியின்மையில் மூழ்கியிருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி கைப்பற்றினார். எரிவாயு மற்றும் எரிபொருளை வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நின்று தகராறு செய்தனர். விவசாயிகள் விவசாய கருவிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஆட்சியை கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே இயல்பு நிலை திரும்பியது. எனவே, எனது பார்வையில் அடுத்த தவணைக்கு அவரை மக்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றும் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“அடுத்த தேர்தலில் ஜனாதிபதி போட்டியிட வேண்டும். அவர் களத்தில் இருந்தால், மக்கள் அவரை தேசிய சொத்தாக தேர்ந்தெடுக்க வேண்டும்,” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment