Header Ads



சவூதியில் சிக்கியுள்ள இலங்கைப் பெண்ணை மீட்டுத்தரும்படி வேண்டுகோள்


சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள  30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பியதாக கணவர் கூறுகிறார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய அவர், இந்த தாக்குதல்களால், அவரது அந்தரங்க உறுப்புகளில் இருந்து தொடர்ந்து இரத்தம் வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.


அடிக்கடி தலையில் அடிபடுவதால், உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், உணவு கூட கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


இவர்களுக்கு 3 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையும், பதினொரு வயதுடைய பாடசாலை செல்லும் சிறுவனும் உள்ளதாகவும், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக திலகரட்ண வீட்டிலேயே இருக்க வேண்டியிருப்பதால், இந்தக் குழந்தைகளுக்கான உணவைக் கூட தேடமுடியவில்லை என்றும் திலகரத்ன கூறுகிறார்.


பலகைகள் மற்றும் பத்திரிகை தாள்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சிறிய வீட்டைக் கட்டுவதற்காக தனது மனைவி வெளிநாடு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.


வெளிநாட்டில் இருந்து வந்த கம்பளை வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் சச்சினியின் தகவலை திலகரட்னவிடம் கூறியுள்ளதுடன், இந்த பெண் சங்கீதாவும் சவுதி அரேபியாவில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்ட போது சமதான என்ற சமூக அமைப்பு தன்னை இலங்கைக்கு அழைத்து வந்ததாக கூறுகிறார்.


இந்த சமூக அமைப்பின் சரத் துல்வல மற்றும் ஆனந்த விஜேசுந்தர ஆகியோர் சவுதி அரேபியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள சசினி மதுஷானி குணசேகர என்ற பெண்ணின் தகவல்களை தேடிப்பிடித்து புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு


பல வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மனித கடத்தலில் ஈடுபட்டு இந்த நாட்டு பெண்களிடம் பணம் சம்பாதிக்கின்றனர். திலகரட்ன தனது மனைவியை அனுப்பிய ஏஜென்சிக்கு சென்றதையடுத்து, அவரை அழைத்து வர 8 இலட்சம் ரூபாவும், பயணச்சீட்டுக்காக 1 இலட்சம் ரூபாவும் கேட்டதாகவும், சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு தொடர்பில்லை என கூறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கூறப்பட்டுள்ளதாக திலகரத்ன கூறுகிறார்.

No comments

Powered by Blogger.