'என்னை மன்னித்துவிடு, நீ மட்டுமே என் தனிமையின் போது இருந்தாய்' - இளைஞரின் விபரீத முடிவு
அம்பேபுஸ்ஸ, பீரிஸ்யால் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து இறந்துள்ளார். 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது நாய் இருந்ததுடன், அவரது உடலை வீட்டில் இருந்து அகற்ற அனுமதிக்காமல் பாதுகாத்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“விட்டோ என்னை மன்னித்துவிடு, நீ மட்டுமே என்னுடன் என் தனிமையின் போது இருந்தாய்” என அவர் தனது நாய்க்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்ததாகவும் பொலிஸார் அதனை மீட்டதாகவும் குறிப்பிட்டனர்.
அந்த கடிதத்தில், தனது நாய் மற்றும் பூனையை யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நாயை அன்புடன் பொறுப்பெடுக்கும் ஒருவரிடம் ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தந்தை கடந்த சில காலங்களுக்கு முன்பு உயிரிழந்ததுடன், பாட்டியுடன் அவர் வாழ்ந்து வந்தமையும் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த இளைஞன் தனிமையில் வாழ்க்கையை நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது.
Post a Comment