Header Ads



உறவினர் வீட்டுக்கு சென்ற ஆட்டோ, நடு வீதியில் தீ பற்றியது


களுத்துறை பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் வீடுக்கு சென்ற குழுவினரை, ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இன்றைய தினம் (14.04.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ராகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அக்கலவத்தைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளாக கூறப்படுகின்றது.


இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.