மகள் மீது அசிட், வீசிய தந்தை
குடும்ப தகராறு காரணமாக தந்தையினால் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய மகள் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் சந்தேகநபரான தந்தை 52 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் போதையில் மகள் மற்றும் குடும்பத்தினரை அடித்து தினமும் துன்புறுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் தொழில் புரிபவர் எனவும்,ரப்பர் தொழிற்சாலையில் இருந்து ஆசிட் போத்தல் திருடப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Post a Comment