Header Ads



"பாராளுமன்றத்தில் உள்ள, குரங்குகளை நாடு கடத்துங்கள்"


இலங்கையிலுள்ள குரங்குகளை நாடுகடத்தாமல் நாடாளுமன்றத்திலுள்ள குரங்குகளை நாடுகடத்த வேண்டும் என்று இலங்கை குரங்கு ஏற்றுமதி குறித்து வினவிய போது பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக Lசிறி செய்தி பிரிவினர் பொதுமக்களிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,


சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காங்களுக்கு இலங்கை குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை விவசாய அமைச்சிடம் கோரியிருந்த நிலையில் 1 இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் 3 லட்சத்துக்கும் அதிகமான குரங்குகள் இருப்பதாகவும் ஏற்றுமதி செய்யப்படவுள்ள குரங்குகள் இலங்கைக்கு மாத்திரம் உரித்தானது.


இலங்கை குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் இலங்கை சுற்றுலாத்துறை பாதிக்கப்படுவது மட்டுமல்லமால் சீனாவிற்கு அனுப்பப்படுவதால் எதிர்காலத்தில் இலங்கைக்கு புதிய நோய் அச்சுறுத்தல் வருவதற்கும் வாய்ப்புள்ளது.


இதேவேளையில் குரங்குகளை ஏற்றுமதி செய்வது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளனர்.


அதனடிப்படையில் இலங்கை வாழ் குரங்குகள் விசேடமாக விவசாயிகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு நகர்புற வாசிகளுக்கும் மிகுந்த சிரமத்தை கொடுக்கக்கூடியதாக உள்ளது. 

No comments

Powered by Blogger.