Header Ads



"அவரைப் பற்றி எங்களுக்கு, இவ்வளவு காலமும் தவறான புரிதல் இருந்துள்ளது"


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில அம்சங்களுடன் தான் உடன்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் (10) ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.


இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,


''குறித்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பொதுவான கருத்தொன்றையே கூறுகின்றனர்.


பொதுவாக சில விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை. அதை அமைச்சரவையில் கூறினேன்.முதலில் ஒரு உயர்மட்ட காவல்துறை அதிகாரியை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.


அதை வழங்க முடியாது. அமைச்சரின் கீழோ அல்லது குறைந்தபட்சம் பாதுகாப்புச் செயலாளரின் கீழோ இருக்க வேண்டும். இது தொடர்பில் அதிக வரைவிலக்கணம் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.


இவ்வாறான சட்டங்கள் சில சமயங்களில் தவறாக பயன்படுத்த கூடும். இது அனைவருக்கும் பாதிப்பில்லாது பயன்படுத்தக்கூடிய சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாம் அனைவரும் முன்னிற்கின்றோம் ."என தெரிவித்தார்.


கேள்வி - இந்த வருடத்திற்கான வேலைத்திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்படும் என அதிபர் கூறுகிறார். IMF திட்டத்திற்கு எந்த விதியின் கீழ் வாக்களிப்பு நடைபெறவுள்ளது?


பதில் - நாடாளுமன்றத்தில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அந்தக் கருத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறோம்.


நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் நியாயத்தை முன்வைக்க வாய்ப்பு உள்ளது. இதை விரும்புகிறார்களா? இல்லையா? அது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதற்கான மாற்று வழி என்ன தான் உள்ளது?


கேள்வி - இலங்கையின் தென் மாகாணத்தில் இருந்து சீனாவுக்கு மிக முக்கியமான சந்தர்ப்பத்தை வழங்க தயாராகி வருகிறோம் என வெளிநாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. ரேடார் நிலையத்தை அமைக்க சீனாவுக்கு அப்படி அனுமதி கொடுத்திருக்கிறோமா?


பதில் - வெளிவிவகார அமைச்சிடம் இருந்து அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


கேள்வி - நீங்கள் அதிபரை பற்றி உயர்வாகப் பேசுவதால், அவருடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவீர்களா?


பதில் - நான் பொதுவாக கட்சியை விட்டு வெளியேறுபவன் அல்ல. நான் தற்போது வேறு யாரையும் தலைவராக பார்க்கவில்லை.


நான் இதற்கு முன் அவருடன் பணியாற்றவில்லை. அவருக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றியுள்ளேன்.


நான் அவருடன் முதல் முறையாக வேலை செய்கிறேன். வேலை செய்யும் போது , அவரைப் பற்றி எங்களுக்கு இவ்வளவு காலமும் தவறான புரிதல் இருந்ததை என்னால் பார்க்க முடிகிறது. IBC

No comments

Powered by Blogger.