ஆண் பூனை, குட்டியை ஈன்ற சம்பவம் - மருத்துவர்கள் அதிர்ச்சி
திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் அணில் பிஸ்வாஸ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட 'மோகி' எனும் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆண் பூனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பூனைக்குட்டியை ஈன்றது. அந்த பூனையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள மக்கள் அனில் பிஸ்வாஸின் வீட்டிற்கு திரண்டு கண்டு ரசித்து வருகின்றனர். பிறகு, பிஸ்வாஸ் சம்பவம் நடந்த உடனேயே, உள்ளூர் கால்நடை மருத்துவர்களுக்கு இந்த தகவலை தெரியபடுத்தினார். இதனையடுத்து, அவர்கள் பிஸ்வாஸின் வீட்டிற்குச் சென்றனர்.
பூனையை பரிசோதித்த அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள், இது எப்படி சாத்தியம் என்று அதிர்ச்சியில் குழம்பி போயினர். இதற்கு அவர்களும் விளக்கம் அளிக்க முடியாமல் திணறினர். பிறகு, இது இயற்கையின் விதியை சவால் செய்யும் சம்பவம் என அறிவியல் ஆராச்சியாளர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து பேசிய பிஸ்வாஸ்" ஆண் பூனை பெண் பூனைக்குட்டிக்கு தாய்ப்பால் கொடுத்தும் வருகிறது. கால்நடை மருத்துவர்களால் கூட இந்த நிகழ்வை விளக்க முடியவில்லை என்று கூறினார்". ஆண் பூனை ஒன்று பெண் பூனைக்குட்டியை ஈன்ற இந்த வியக்கத்தக சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
Dailythanthi
Post a Comment